Monday, September 17, 2018

jaffnanews;வலிகாமம் என்பது என்ன?

வலிகாமம், இலங்கையின் வட முனையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள ஒரு புவியியற் பிரிவாகும்.

அண்ணளவாக 1262 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாடு, குடியேற்றவாத ஆட்சிக்காலங்களுக்கு முன்பிருந்தே வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

இவற்றுள் முக்கியமானது குடாநாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் பிரிவாகும்.

இதன் வடக்கே இந்து மாகடலும், மேற்கே தீவுப் பகுதிக்கும், குடாநாட்டுக்கும் இடையிலான கடல்பகுதியும், தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியும், எல்லைகளாக அமைந்திருக்கத் தெற்கில் ஒருபகுதியில் தென்மராட்சிப் பிரிவும், கிழக்கில் வடமராட்சிப் பிரிவும் அமைந்துள்ளன.

குடாநாட்டின் வளம் மிக்க பகுதிகள் பெரும்பாலும் வலிகாமப் பகுதியிலேயே அமைந்துள்ளன.

யாழ்ப்பாண அரசுக் காலத்திலிருந்தே இப் பகுதி, ஒப்பீட்டளவில் அதிக மக்கள் தொகையைக் கொண்டதாகவும், மக்கள் அடர்ந்து வாழும் பகுதியாகவும் விளங்கி வந்திருக்கிறது.

பண்டைக்காலத்தில் முக்கிய நகரமாக விளங்கியதாகக்கருதப்படும் கதிரைமலை எனஅழைக்கப்படும் கந்தரோடையும், பிற்கால யாழ்ப்பாண அரசின் தலைநகரமான நல்லூரும், தற்கால வடமாகாணத்தின் தலைமை நகரமான யாழ்ப்பாணமும் வலிகாமப் பிரிவிலேயே உள்ளன.

No comments:

Post a Comment