Wednesday, September 19, 2018

பிக் பாஸ்: கொஞ்சம் நியாயமாக விளையாடலாமா ஐஸ்வர்யா யாஷிகா? 10 மணிநேரத்திற்கு முன்பு

பிக் பாஸ்: கொஞ்சம் நியாயமாக விளையாடலாமா ஐஸ்வர்யா யாஷிகா?




இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டு ஞாபக மறதி டாஸ்கில், ஐஸ்வர்யா சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற போட்டியாளர்கள் அவரது நினைவாற்றலை பார்த்து கலங்கி போனார்கள்.


மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கு இடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் தற்போது வைல்ட் கார்டு போட்டியாளருடன் சேர்த்து 6 பேர் உள்ளனர்.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் டாஸுகுகள் மிகவும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று ஞாபக மறதி டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

பத்து சுற்றுகள் முடிவில் ஜனனி, ஐஸ்வர்யா 230 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். யஷிகா, பாலாஜி இருவரும் குறைந்த புள்ளிகளுடன் தோல்வி அடைந்தனர். ரித்விகா மற்றும் விஜயலட்சுமி ஒருவாராக சமாளித்து டாஸ்கை முடித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் பிக்பாஸ் கேட்டுக்கொண்டதன் படி, போட்டியாளர்கள் இதுவரை பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட நல்ல அனுபவங்கள், மோசமாக தருணங்களை மற்றவர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொண்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்புவதற்காக காலம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் போட்டிகளை கடுமையாக்கி வருகிறார். இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில் ஹவுஸ்மேட்ஸ் மிகுந்த நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்,




No comments:

Post a Comment