யாழ்ப்பாண மாவட்டம் (Jaffna District) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்று.
இதுநாட்டின் வடக்கேஅமைந்துள்ளது. மேற்கில் மன்னார் வளைகுடாவும், வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியாலும்சூழப்பட்டுள்ளது.
இலங்கையின் தலை போல் அமைந்துள்ள, யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் பெரும் பகுதியை
இந்த மாவட்டம் உள்ளடக்கியுள்ளதுடன், தெற்கேயுள்ள பல தீவுகளும் இதனுள் அடங்கும்.
இத் தீபகற்பத்தினுள்ளிருக்கும், தொண்டமானாறு, உப்பாறு போன்ற கடல்நீரேரிகளால், இம்மாவட்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவுகள், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி என அழைக்கப்படுகின்றன.
இம் மாவட்டத்தின் தெற்கு எல்லையில், யாழ்மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருந்து 1984 பெப்ரவரியில் பிரிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் உள்ளது.
No comments:
Post a Comment