சினிமா ;நள்ளிரவில் தேவைப்பட்டால் கூப்பிடுங்கள் நான் வருகிறேன் என நடிகர் ஒருவர் தன்னிடம் கூறியதாக ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்கிறார்கள். ஆனால் பாலிவுட்டில் உள்ளவர்களுக்கு இன்னும் அந்த துணிச்சல் வரவில்லை என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இது குறித்து மேலும் கூறியதாவது;
சினிமா துறையில் நடிகைகளுக்கு மட்டும் அல்ல நடிகர்களுக்கும் பாலியல் தொல்லை அளிக்கப்படுகிறது. அதனால் நடிகர்களும்இ நடிகைகளும் பயம் இல்லாமல் அது குறித்து வெளியே சொல்ல வேண்டும். அவ்வாறு தங்களுக்கு நேர்ந்த பிரச்சனை குறித்து பேசுபவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆதரவு அளித்தால் தான் மற்றவர்களும் துணிந்து பேசுவார்கள்.
அண்மையில் எனக்கு நடந்த சம்பவம் பற்றி கூறுகிறேன். நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எனது முதுகில் அடிபட்டது. படப்பிடிப்பு முடிந்ததும் நான் என் ஹோட்டல் அறைக்கு கிளம்பினேன். நான் சென்ற அதே லிஃப்ட்டில் என்னுடன் பணியாற்றிய நடிகரும் வந்தார். அவரும் அந்த படத்தில் பணியாற்றுகிறார் என்றாலும் நாங்கள் அவ்வளவாக பேசியது இல்லை.
எனக்கு முதுகில் காயம் ஏற்பட்டது அந்த நடிகருக்கு தெரியும். இந்நிலையில் நள்ளிரவில் உதவி தேவைப்பட்டால் என்னை கூப்பிடுங்கள். நான் வந்து முதுகை தடவி விடுகிறேன் என்றார். அந்த நடிகர் கூறியதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரும் நன்றாக பழகியதால் அந்த நபர் என்னிடம் சொன்னதை தயாரிப்பாளர், இயக்குனரிடம் தெரிவித்தேன்.
அவர்கள் அந்த நடிகரை அழைத்து பேசினார்கள். அந்த நடிகர் வளர்ந்த கலாச்சாரப்படி அவர் கூறியதில் உள்நோக்கம் இல்லை என்பதை பிறகு தான் தெரிந்து கொண்டேன். அவர் கூறியதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்ததை அவர் அப்போது உணரவில்லை. அதன் பிறகு அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment