பஸ் கட்டணங்கள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளன.
அதன்படி, பஸ் கட்டணங்கள் 4 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக தனியார் பஸ் சங்கங்களுடன் போக்குவரத்து அமைச்சில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற விசேட கலந்துரையாடாலை தொடர்ந்து அமைச்சர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, குறைந்தபட்ச பஸ் கட்டணமான 12 ரூபாயில் மாற்றம் ஏற்படாது என்றும், ஏனைய கட்டணங்கள் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு, தனியார் பஸ் உரிமையாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில் இந்த கட்டண அதிகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment