திருமணப் பரிசாக தம்பதிகளுக்கு எரிபொருளை வழங்கிய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் கடலூர் பகுதியில் இரு தம்பதிகளின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று வந்தது.
அதன்போது மாப்பிள்ளையின் நண்பர் ஒருவர் மணமேடைக்கு விரைந்து சென்று 5 லீட்டர் எரிபொருளை வழங்கியுள்ளார்.
அண்மைக் காலமாக அதிகரித்து வரும் எரிபொருளின் விலை அதிகரிப்பை எதிர்த்து, மக்களுக்கு விழிப்புணர்வை வழங்கும் நோக்கிலேயே குறித்த நபர் இவ்வாறு பரிசளித்துள்ளார்.
இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்லாது, தற்போது இலங்கையிலும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment